நிலக்கரி தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை - மத்திய அரசின் பக்கா பிளான்!

Update: 2022-06-27 10:09 GMT

சமையலுக்கு பயன்படுத்தப்படும் நிலக்கரி உற்பத்தியை கணிசமாக அதிகரிப்பதற்கான செயல்திட்டத்தை நிலக்கரி அமைச்சகம் உருவாக்கியுள்ளது. தற்போது, தனியார் துறையினரால் உற்பத்தி செய்யப்படும் 9.26 மில்லியன் டன் உள்பட ஆண்டுக்கு 23 மில்லியன் டன் வீட்டுஉபயோக நிலக்கரி உற்பத்தி செய்யப்படுகிறது.

2021-22ம் நிதியாண்டில் இந்தியா 51.7 மில்லியன் டன் கச்சா சமையல் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் அதிகமாகும். நடப்பு நிதியாண்டில் இதுவரை 8.3 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதுடன் இது தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

இந்நிலையில் ஆண்டுக்கு 30 மில்லியன் டன் சமையலுக்கு பயன்படும் நிலக்கரியை சுத்தம் செய்வதற்காக மேலும் 9 சுத்தப்படுத்தும் மையங்களை அமைக்க கோல் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நாட்டில் 2030-ம் ஆண்டு வாக்கில் 140 மில்லியன் டன் அளவிற்கு சமையலுக்கு பயன்படும் நிலக்கரியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஃகு துறைக்கு மட்டும் 2023 நிதியாண்டில் 3.45 மில்லியன் டன் சுத்தப்பட்டுத்தப்பட்ட நிலக்கரியை கோல் இந்தியா நிறுவனம் வழங்கவுள்ளது.

Input From: Livemint

Similar News