கொள்கையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்தார் காங்கிரஸ் எம்.ஏல்.ஏ !
Breaking News.
உத்ரகாண்ட் மாநில காங்கிரஸ் எம்.ஏல்.ஏவும் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான ராஜ்குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.
காங்கிரஸ் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை சுகந்திரம் அடைந்ததில் இருந்து உயர்த்தமால் அவர்களை மானியங்களை சார்ந்தே வாழ வைத்துள்ளது எனவும் ஆனால் பாஜக ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்சிக்காக பாடுபடுகிறது என கூறினார். மேலும், ஒடுக்கப்பட்ட மக்கள் யாருடைய உதவி இன்றி தன்னம்பிக்கையுடன் வாழ்வதை பாஜக உறுதி செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். இந்த நிகழ்சியில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மாநில தலைவர் மதன் கவுசிக் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் பிடிக்காமல் பாஜகவில் எம்.ஏல்.ஏ இணைந்து அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.