பெண் பத்திரிகையாளரிடம் முரட்டுத்தனமாக நடக்கும் காங்கிரஸ் MP!

பெண் பத்திரிகையாளரிடம் முரட்டுத்தனமாக நடக்கும் காங்கிரஸ் MP!

Update: 2020-12-24 09:49 GMT

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு என்று கூறி பல எதிர்க் கட்சிகள் இதனை அரசியல் மயமாகி வருகின்றனர். சில காங்கிரஸ் தலைவர்கள் விவசாயிகளுடன் சேர்ந்து டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதில் பங்குபெற்றுள்ள காங்கிரஸ் MP ஜஸ்பீர் டிம்பா, RPD 24 தொலைக்காட்சியின் பெண் பத்திரிகையாளர் சந்தன்பிரீத் கவுரிடம் கேமெராவை பிடுங்கி முரட்டுத்தனமாக நடந்துள்ளார். 

RPD 24 வெளியிட்ட வீடியோவில், பத்திரிகையாளர் கேட்ட ஒரு கேள்வி அவரை கோபமடையச் செய்து முரட்டுத்தனமாக நடக்கச் செய்துள்ளது. வீடியோவின் இரண்டாம் பகுதி குறித்துப் பேசிய கவுர், டிம்பாவின் குழு பதிவு செய்யப்பட்ட வீடீயோவை பெறாமல் விடவில்லை என்று கூறினார். டிசம்பர் 22 இல் பத்திரிகையாளர் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்றுள்ளார். இவர் டிம்பாவிடம் சுலபமாகப் பதிலளிக்கக் கூடிய பதிலைக் கேட்டுள்ளார். 

Full View

அவர் டிம்பாவிடம், விவசாயிகளிடம் எந்த அரசியல் கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லை என்று கூறுவதற்குக் காரணத்தைக் கேட்டுள்ளார். இதற்குக் கோபமடைந்த டிம்பா, நம்பிக்கை இல்லாததுக்குக் காரணமானவர்களிடம் கேட்டுமாறும் தன்னை குற்றம்சாட்ட வேண்டாமென்று கூறியுள்ளார்.  இதில் கவுர் எங்கேயும் டிம்பாவை குற்றம்சாட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இது இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதத்தில் சென்று முடிவடைந்தது. டிம்பா கேமரா வைத்திருப்பவரிடம் சென்று அதனைப் பிடுங்க முயன்றுள்ளார். சில நேரத்தில் டிம்பா வீடீயோவை அளிக்க முயன்றபோது, கேமரா துண்டிக்கப்பட்டது. அதிலிருந்த மெமரி கார்டை டிம்பா எடுத்துச் சென்று விட்டதாக கவுர் குற்றம்சாட்டியுள்ளார். அதில் இருந்த மற்றொரு மெமரி கார்டு மூலம் காங்கிரஸ் தலைவர்களின் உண்மை முகத்தைக் காட்ட உதவியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்துப் பேசிய எலக்ட்ரானிக் மீடியா அசோசியேஷன், டிம்பாவின் நடவடிக்கைக்கு உடனடியாக மன்னிப்பு கேட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த அமைப்பின் தலைவர் நரேந்திர நந்தன், ஊடகத்துக்கு எதிராக இதுபோன்ற செயல்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது. இவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். 

Similar News