ப.சிதம்பரத்திற்கு எதிராக பொங்கிய காங்கிரஸ் கட்சியினர் - என்ன நடந்தது?

மேற்குவங்க அரசு பால் நிறுவனத்தின் பங்குகளை தனியார் நிறுவனத்துக்கு விற்பதை எதிர்த்து அந்த மாநில காங்கிரஸ் தலைவர் தொடுத்த வழக்கில் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக ப.சிதம்பரம் வழக்கறிஞராக ஆஜரான சம்பவம் காங்கிரஸ் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-05-05 11:33 GMT

மேற்குவங்க அரசு பால் நிறுவனத்தின் பங்குகளை தனியார் நிறுவனத்துக்கு விற்பதை எதிர்த்து அந்த மாநில காங்கிரஸ் தலைவர் தொடுத்த வழக்கில் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக ப.சிதம்பரம் வழக்கறிஞராக ஆஜரான சம்பவம் காங்கிரஸ் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது 2024'ல் நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் விரும்பினால் கூட்டணி வைக்கலாம் என மம்தா கோரினாலும் மேற்கு வங்கத்தில் என்னவோ காங்கிரசும் திரிணாமுல் காங்கிரசும் எதிரெதிர் அணிகளில் தான் இருக்கின்றன.


இதற்கு ஏற்றாற்போல் மேற்குவங்க அரசு பால் நிறுவனத்தின் பங்குகளை தனியார் நிறுவனத்திற்கு விற்பதை எதிர்த்து அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்திரி வழக்கு தொடுத்திருந்தார், இந்த வழக்கு தொடர்பான விசாரணை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது அப்பொழுது அரசு பால் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வழக்கறிஞராக ஆஜரானதை கண்டு காங்கிரஸார் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.


அதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த காங்கிரசுக்கு ஆதரவான வழக்கறிஞர்கள் ப.சிதம்பரம் கட்சியின் உணர்வுகளுடன் விளையாடுகிறார், இதுபோன்ற தலைமைதான் மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம் இங்கிருந்து திரும்பிச் செல்லுங்கள் என சிதம்பரத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதை தொடர்ந்து அந்த பகுதியே பரபரப்பானது.


Source - Junior Vikatan

Similar News