அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி உட்கட்சி பூசலை சந்தித்து வருகிறது. அந்த வகையில் பஞ்சாபில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டிவுள்ளது. உட்கட்சி பூசலால் தன் பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்க். அவரது ராஜினாமாவிற்கு நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் அவருக்கும் நடந்த மோதலே காரணம்.
சித்துவை தணிக்க காங்கிரஸ் மேலிடம் அவருக்கு மாநில தலைவர் பதவியை அளித்தது. சித்துவின் பதவி ஏற்பு விழாவில் கூட அப்போது முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் கலந்து கொண்டார். பின்னர் தான் அவர் முதல்வரை பதவியை ராஜினாமா செய்தார்.
முதல்வர் பதவியில் சித்துவின் ஆதரவாளர் சரண்ஜித்சிங் சன்னி பொறுப்பேற்றார்.
இதனால் பஞ்சாப் அரசியல் சூடு பிடிக்க தொடங்கியது.
கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரசுக்கு பதிலடி கொடுக்க டெல்லி சென்று பி.ஜே.பி தேசிய தலைவர் நாட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து காங்கிரஸில் இணைய போவதாக செய்திகள் வெளிவந்த நிலையில்.
பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இது காங்கிரசுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்வது போல் அமைந்துள்ளது.
பஞ்சாபின் புதிய அமைச்சரவையில் ராணா குருஜித் சிங்க் இடம்பெற்றிருப்பது சிந்துவை எரிச்சல் ஆக்கிவுள்ளது என்று தகவல்கள் வெளியாகின்றன. இதனால் தான் அவர் அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
Image : India Today