முகேஷ் அம்பானியை கொல்ல சதியா? வெடிபொருட்களுடன் வீடு அருகே நின்ற கார்.!
முகேஷ் அம்பானியை கொல்ல சதியா? வெடிபொருட்களுடன் வீடு அருகே நின்ற கார்.!
இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி இவரது வீடு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் பயங்கர வெடிபொருட்கள் இருப்பதை போலீசார் கண்டுப்பிடித்தனர்.
உலகப் பணக்காரர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் முகேஷ் அம்பானி, இவர் அனைத்து நாடுகளிலும் தொழில் செய்து வருகிறார். இவர் செய்யாத தொழில் நிறுவனங்களே கிடையாது என்றும் சொல்லலாம். முகேஷ் அம்பானி மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘அண்டிலியா’ என்ற பெயருடன் மும்பையில் மிக பிரமாண்ட சொகுசு பங்களா கட்டி அதில் தனது குடும்பத்துடன் குடியேறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று (25ம் தேதி) அண்டிலியா பங்களாவிற்கு வெளியே சந்தேகத்துக்கு இடமான ஒரு சொகுசு கார் நிறுத்தப்பட்டிருந்தது. இது பற்றிய தகவலை பங்களாவில் பணிபுரிகின்ற ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காரை ஆய்வு செய்தபோது, அதில் பயங்கரமான வெடிபொருட்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்த போலீசார் தீவிரமாக சோதனை செய்த பின்னர் அந்த காரை அப்புறப்படுத்தினர். மேலும், கார் பற்றிய விவரங்கள் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஷம்புராஜ் தேசாய், சம்பவம் தொடரபாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
உலகப் பணக்காரர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் முகேஷ் அம்பானி, அவரை கொலை செய்ய திட்டம்போட்டு வெடிகுண்டு நிரப்பிய காரை எடுத்து வந்தனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை முழுவதும் இந்த செய்திதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.