விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் தவறாக வழி நடத்தப்படும் கூட்டம் - சர்வதேச ஆதரவை திரட்ட நடந்த சதி!

விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் தவறாக வழி நடத்தப்படும் கூட்டம் - சர்வதேச ஆதரவை திரட்ட நடந்த சதி!

Update: 2021-02-04 08:13 GMT

தற்போது நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக சில பிரபலங்கள் மற்றும் குழுக்கள் சமூக ஊடகங்களில் 'பரபரப்பான' கருத்துக்களை தொடர்ந்து வெளியிடுவதால், வெளியுறவு அமைச்சகம் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள், பாராளுமன்றத்தில் விவாதம் மற்றும் கலந்துரையாடலுக்குப் பிறகு தான் சட்டமாக மாற்றப்பட்டது. தற்போது நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் சில சுயநல நலக் குழுக்கள் தங்கள் திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதாகவும், போராட்டத்தை தடம் புரட்ட முயற்சிப்பதாகவும் அரசாங்கம் கூறியது.

வேளாண் சட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக சமூக ஊடகங்களில் சில நபர்களின் கருத்துக்களைக் குறிப்பிடுகையில், “பரபரப்பான சமூக ஊடக ஹேஷ்டேக்குகள் மற்றும் கருத்துகளின் வெளிப்பாடு மக்களிடம் தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது. குறிப்பாக பிரபலங்களின் கருத்துகள் துல்லியமானதாகவோ அல்லது பொறுப்பாகவோ இல்லை” என்று மத்திய அரசு கூறுகிறது.

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்றும், அவர்களின் விளைபொருட்களை விற்க அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொடுக்கும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, மத்திய அமைச்சர்கள் உட்பட அரசாங்க பிரதிநிதிகள் உழவர் சங்கங்களுடன் 11 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும், சட்டங்களை 1 முதல் 1.5 ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் முழு அறிக்கையையும் படியுங்கள்:

"இந்திய நாடாளுமன்றம், முழு விவாதம் மற்றும் கலந்துரையாடலுக்குப் பிறகு தான், விவசாயத் துறை தொடர்பான சீர்திருத்தவாத சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சீர்திருத்தங்கள் விரிவாக்கப்பட்ட சந்தை அணுகலை அளித்து, விவசாயிகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை அளித்தன. அவை பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான நிலையான விவசாயத்திற்கும் வழி வகுக்கின்றன.

ஆனால் இதனை எதிர்ப்பது இந்தியாவின் சில பகுதிகளில் உள்ள விவசாயிகள் மட்டுமே. அவர்கள் இடத்தரகர்களாக வருகின்றனர். விவசாயம் மட்டுமே செய்வோரை இந்த சட்டம் பாதிக்காது. இருந்தாலும் போராட்டக்காரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்திய அரசு அவர்களின் பிரதிநிதிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது. மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தைகளில் ஒரு பகுதியாக இருந்துள்ளனர், மேலும் பதினொரு சுற்று பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன. சட்டங்களை நிறுத்தி வைக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

ஆயினும்கூட, இந்த ஆர்ப்பாட்டங்களில் தங்கள் திட்டங்களை அமல்படுத்துவதற்கு சுயநல குழுக்கள் முயற்சிப்பது துரதிர்ஷ்டவசமானது. இது இந்திய குடியரசு தினமான ஜனவரி 26 அன்று மிகவும் சாட்சியாக இருந்தது. தேசிய நினைவு நாளில் இந்திய தலைநகரில் வன்முறை மற்றும் காழ்ப்புணர்ச்சி நடந்தது.

சில குழுக்கள் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச ஆதரவைத் திரட்ட முயற்சித்தன. இது இந்தியாவிற்கும் எல்லா இடங்களிலும் நாகரிக சமுதாயத்திற்கும் மிகவும் கவலை அளிக்கிறது.

இந்த போராட்டத்தில் காவல்துறையில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் உடல் ரீதியாக தாக்கப்பட்டுள்ளனர், சில சந்தர்ப்பங்களில் பலத்த காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News