பிரம்மபுத்திரா ஆற்றின் மீதுள்ள உலகின் மிகப்பெரிய தீவுக்கு 8.25 கிமீ நீளமுள்ள பாலம் - அஸ்ஸாமுக்கு உதவிக்கரம் நீட்டும் மத்தியஅரசு!

Construction of 8.25-km-long Jorhat-Majuli bridge over Brahmaputra begins

Update: 2021-11-30 04:57 GMT

பிரம்மபுத்திரா மீது அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய நதி தீவான மஜூலியை ஜோர்ஹாட்டுடன் இணைக்கும் 8.25 கிமீ நீளமுள்ள பாலத்தின் கட்டுமானப் பணிகளை அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தை லக்னவைச்சேர்ந்த  உபி ஸ்டேட் பிரிட்ஜ் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் செயல்படுத்தும். மேலும் இந்த திட்டத்தை முடிக்க நான்கு ஆண்டுகள் ஆகும் என்று முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

அஸ்ஸாம் அரசாங்கம் தீவின் வடக்குப் பகுதியில் உள்ள மஜூலி தீவை லக்கிம்பூருடன் இணைக்கும் புதிய பாலத்தை ரூ. 750 கோடி மதிப்பீட்டில் கட்டமைக்கிறது.

மஜூலி-ஜோர்ஹாட் பாலம் கட்டப்படும் நிலையில், உடனடி அப்பகுதியை அணுகும் வகையில் NH-715K இல் தக்ஷின்பட் சாலைக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ரூ.925.47 கோடியை அனுமதித்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அஸ்ஸாம் மாநில முதல்வர் சர்மா, "இன்று மஜூலி மக்களுக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாள். மஜூலி-ஜோர்ஹட் பாலத்தின் கட்டுமான துவக்கம் ஒரு மைல்கல் நிகழ்வாகும், மேலும் இது மாவட்டத்தின் வளர்ச்சி பயணத்திற்கு புதிய வேகத்தை கொடுக்கும்.

இந்த பாலம் மஜூலி மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். இந்த பாலத்தின் கட்டுமானம் முடிந்ததும், ஜோர்ஹட் மற்றும் மஜூலி இடையேயான இணைப்புக்கு இது ஒரு முன்னுதாரண மாற்றத்தை கொடுக்கும், மேலும் தீவு மாவட்டத்தில் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

திட்டத்தின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கவும், நவம்பர் 2025 க்குள் பாலத்தை திறந்து வைப்பதை நோக்கமாகக் கொண்ட அமைச்சரவை குழுவை மாநில அரசு ஏற்கனவே அமைத்துள்ளது என்றார்.

இந்த பாலத்திற்காக சுமார் 200 கோடி ரூபாய் மாநில அரசால் செலவிடப்படும் என்றும் அவர் கூறினார். இத்திட்டத்தின் கீழ், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த டிசி அலுவலகம், தள மேம்பாடு மற்றும் குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



Similar News