உதவியின் பெயரால் மதமாற்றம் செய்வது தவறு - சுளீரென அடித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்
உதவியின் பெயரில் மதமாற்றத்தில் ஈடுபடுவது தவறு என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மதச் சுதந்திர சட்டம் 2021ன் படி ஒருவரை கட்டாயமாக மதம் மாற்றினாலோ, அதற்கு உதவி செய்தாலோ 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
இந்த சட்டத்தின் 5-வது பிரிவின்படி, ஒருவர் மதம் மாற விரும்பினால் அந்த நபர் மாவட்ட ஆட்சியரிடம் முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும். அவருக்கு மதமாற்ற சடங்குகளை செய்யும் மதத் தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
இதனை எதிர்த்து உலமா இ ஹிந்த் என்ற அமைப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அதில், மனிதாபிமான உதவி, பொருளாதார உதவி, பரிசு பொருட்களை வழங்கி ஏமாற்றி மத மாற்றம் நடைபெறுகிறது. மிரட்டி, கட்டாயப்படுத்தியும் மதமாற்றம் நடைபெறுகிறது. இவற்றை தடுக்க வேண்டும்" என்று கோரியிருந்தார். இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசு களும் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்பிறகு நீதிபதிகள் கூறும்போது, "உதவி யின் நோக்கம் தூய்மையானதாக இருந்தால் அதனை வரவேற்கலாம். அதேநேரம் உதவியின் நோக்கம் மத மாற்றமாக இருந்தால் அது தவறு. இது மிக தீவிரமான பிரச்சினை. அரசியல் சாசனத்துக்கு எதிரானது'' என்று தெரிவித்தனர். அடுத்த விசாரணை டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Input From; HIndu