கொரோனா தாக்கியவர்களுக்கு எல்லா உறுப்புகளும் பாதிக்கும்.. ஆய்வில் திடுக்கிடும் தகவல்.!

கொரோனா தாக்கியவர்களுக்கு எல்லா உறுப்புகளும் பாதிக்கும்.. ஆய்வில் திடுக்கிடும் தகவல்.!

Update: 2021-02-22 19:27 GMT

கொரோனா வைரஸ் தாக்கினால் உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும்- என்று ஆய்வு முடிவில் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் அவர்களுக்கு முதலில் நுரையீரல் மற்றும் இதயம் பெரிதும் பாதிக்கப்படும் என முதலில் தகவல்கள் வெளியாகியது. இதனால் பெரும்பாலும் கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு முக்கிய உறுப்பாக பாதிக்கப்பட்டது நுரையீரல்தான். இதனால் அனைத்து நோயாளிகளுக்கும் நுரையீரலில் உள்ள சளியை எடுப்பதில் மருத்துவர்கள் கவனம் செலுத்தி வந்தனர். சிலர் தொற்று அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். இதன் பின்னர் சிறுநீரகமும் செயலிழக்கும் என கூறப்பட்டது.

இந்நிலையில், கொரோனா வைரசின் பிந்தைய பின் விளைவுகள் பற்றிய மிகப் பெரிய ஆய்வை இந்திய விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். ஐதராபாத், நாக்பூர், பெங்களூர், பாட்னா, சண்டிகரில் உள்ள விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

அதில் கொரோனா பாதித்தவர்களின் உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மிக சிறிய உடல் உறுப்புகளையும் வைரஸ் பெரிதும் பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இதயம், நுரையீரல் மற்றும் கல்லீரல் உள்ளிட்டவை மட்டுமின்றி ரத்த நாளங்களையும் கொஞ்சம், கொஞ்சமாக பாதிக்கும் என்கிறார்கள்.

இதில் இருந்து நாம் தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News