மாநிலங்களுக்கு கொரோனா அவசர கால நிதியை விடுவித்த மத்திய அரசு! எவ்வளவு கோடிகள் தெரியுமா?
கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கொரோனா அவசரகால நிதி தொகுப்பில் இருந்து ரூ.1,828 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கொரோனா அவசரகால நிதி தொகுப்பில் இருந்து ரூ.1,828 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாணடவியா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்று பரவலை எதிர்கொள்வதற்காக கொரோனா அவசரகால நிதி தொகுப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட, 12 ஆயிரத்து 185 கோடி ரூபாயில் இருந்து முதற்கட்டமாக, 15 சதவீதம் தொகை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்காக விடுவிக்கப்படுகிறது.
அதன்படி 1,827.80 கோடி ரூபாய் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு உதவியாக அமையும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: Dinamalar
Image Courtesy: ட்விட்டர்
https://www.dinamalar.com/news_detail.asp?id=2814113