மண பெண்ணுக்கு கொரோனா.. கவச உடை அணிந்து நடந்து முடிந்த திருமணம்.!

மண பெண்ணுக்கு கொரோனா.. கவச உடை அணிந்து நடந்து முடிந்த திருமணம்.!

Update: 2020-12-07 12:29 GMT

ராஜஸ்தான் மாநிலம், பாரா மாவட்டத்தில் திருமண நடைபெறும் அன்று மண பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து புதுமண ஜோடிகள் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து திருமணம் செய்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.


ராஜஸ்தான் மாநிலம், பாரா மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஜோடிக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து திருமணத்துக்கு முந்தைய நாள் மணப்பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், திருமணம் நடைபெறும் காலையில் மணப்பெண்ணின் கொரோனா பரிசோதனை முடிவு வந்தது.


இந்த பரிசோதனை முடிவால் இரு வீட்டார்களும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து மணப்பெண் பாராவில் உள்ள கெல்வாரா கோவிட் மையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அதேசமயம் இரு வீட்டாரும் திருமணத்தை தள்ளி வைக்க வேண்டாம் என்று முடிவெடுத்தனர்.

இதனை தொடர்ந்து கெல்வாரா கோவிட் மையத்தில் அரசின் கோவிட் நெறிமுறைகளுடன் அந்த ஜோடியின் திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்தது.
திருமண சடங்குகளை செய்த அர்ச்சகர், புதுமண ஜோடி மற்றும் மணப்பெண்ணின் உறவினர்கள் அனைவரும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து இருந்தனர் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News