கொரோனாவுக்கு மேலும் 7 தடுப்பூசிகள் வருகிறது.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.!

கொரோனாவுக்கு மேலும் 7 தடுப்பூசிகள் வருகிறது.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.!;

Update: 2021-02-07 18:45 GMT

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து தற்போது வெற்றிகரமாக தடுப்பூசிகளை கண்டுப்பிடித்து வருகின்றனர். அதிலும் இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் மேலும் 7 கொரோனா தடுப்பூசிகள் தயார் செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் கூறியுள்ளார். கடந்த மாதம் ஜன., 16ம் தேதி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் 57.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறும்போது, கொரோனா தொற்றுக்கு தற்போது 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் மருந்துகள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்பபுறவு பணியாளர்கள் ஆகியோர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதே போன்று மேலும் 7 தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கின்ற முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். நமது நாட்டில் அதிகமான மக்கள் தொகை இருக்கின்றனர். அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டியதற்காக விஞ்ஞானிகள் தொடர்ந்து தங்களது பணிகளை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News