இந்தியாவில் இங்கு மட்டும் அதிகமாகும் கொரோனா - கடவுளின் தேசத்துக்கு வந்த சோதனை!

இந்தியாவில் இங்கு மட்டும் அதிகமாகும் கொரோனா - கடவுளின் தேசத்துக்கு வந்த சோதனை!

Update: 2020-12-28 16:54 GMT
 நாடு முழுவதும் கொரோனா வீரியம் குறைந்து வரும் வேளையில் கேரளாவில் மட்டும் கொரோனா அதிகரித்து வருகிறது.

உலக நாடுகளையே அச்சுறுத்திய கொரோனாவல் பல்வேறு வகையில் நஷ்டம் ஏற்பட்டது. இந்தியாவில் கொரோனா வீரியத்தை குறைக்க பல்வேறு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது கொரோனா நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

ஆனால் கேரள மாநிலத்தில் கொரோனா பரிசோதனை செய்தவர்களின் தொற்று உள்ளவர்களின் விகிதம் 10 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் ஒப்பிடும் போது கேரளாவில் தொற்று பாதித்தவர்களின் விகிதம் அதிகமாகியுள்ளது.

கடந்த நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை நடத்தப்பட்ட பரிசோதனையில தொற்று கண்டறியப்பட்டோர் விகிதம் 9.4 விழுக்காடாக பதிவானது. தற்போது டிசம்பர் 13 முதல் 26ஆம் தேதி வரை 10 விழுக்காடாக அதிகரித்துள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரளாவில் கொரோனா பாதிகப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அம்மாநில சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். 

Similar News