75 நாட்களுக்கு பின்னர் மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா.. 5000 ஆயிரத்தை கடப்பதால் மக்கள் அதிர்ச்சி.!

75 நாட்களுக்கு பின்னர் மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா.. 5000 ஆயிரத்தை கடப்பதால் மக்கள் அதிர்ச்சி.!

Update: 2021-02-19 11:02 GMT

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தினமும் 5 ஆயிரத்தை கடந்து செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்ப கட்டத்தில் இருந்தே அம்மாநில முதலமைச்சர் உத்தவ்தாக்கரே சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தொற்று இன்னும் குறையாமல் உள்ளது என்று அம்மாநில மக்கள் அரசு மீது குற்றம்சாட்டி வருகின்றனர். மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் அம்மாநிலத்தில் மத்திய அரசு கூறிய வழிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட காரணத்தினாலே கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பை மாநகராட்சி மேயர் கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிர அமைச்சர்களான ராஜேஷ் தோப், ஜெயந்த் படீல் உட்பட மும்பையில் 736 பேருக்கும், மாநிலம் முழுவதும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமராவதி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை சந்தைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மும்பை புறநகர் ரயில்களில் மாஸ்க் அணியாமல் செல்வோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் விதமாக 300 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருமண மண்டபங்கள், விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பு நடவடிக்கைகளை ஆரம்ப முதலே எடுத்திருந்தால் மற்ற மாநிலங்களை போல் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்திருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 

Similar News