முக்கிய முடிவு எடுக்கப்படுமா?மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

Update: 2022-01-13 02:43 GMT

ஒமைக்ரான் தொற்று பரவியதை தொடர்ந்து மீண்டும் நாட்டில் 3வது அலை தற்போது உருவாகியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பல மருத்துவமனைகளில் மீண்டும் படுக்கை வசதிகள் பற்றாக்குறை ஏற்படும் அச்சம் உருவாகியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு என பிறப்பித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று பிரதமர் மோடி (ஜனவரி 13) காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்தவும், அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகளை அதிகரித்து நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் போதுமான அளவு தயார் நிலையில் வைக்க வேண்டும் எனவும் உத்தரவிடுவார் என கூறப்படுகிறது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News