கொரோனா அச்சுறுத்தல்.. குளிர்கால கூட்டத்தொடர் ரத்து.!

கொரோனா அச்சுறுத்தல்.. குளிர்கால கூட்டத்தொடர் ரத்து.!

Update: 2020-12-15 12:52 GMT

கொரோனா வைரஸ் தொற்று குறைந்த காரணத்தால் நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இதனால் மக்கள் போதுமான அளவிற்கு கட்டுப்பாட்டை பின்பற்றி நடக்கவில்லை. இதன் காரணமாக பல மாநிலங்களில் மீண்டும் கொரேனா வைரஸ் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதே போன்று தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை ஐஐடியில் கடந்த 2 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று 180க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தமிழகத்தில் வைரஸ் பரவும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை தவிர்ப்பதற்காக குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்யுமாறு அனைத்து அரசியல் கட்சிகளும் கேட்டுக் கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

குளிர்கால தொடர் ரத்தாவதால் இனி நேரடியாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பரில் மழைக்கால கூட்டத்தொடர் முடிவுற்றது. அடுத்த 6 மாதங்களுக்குள் அவையை கூட்டினால் போதும் என்பதால், குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
 

Similar News