இந்தியாவின் மைல்கல் சாதனை - 195.19 கோடி தடுப்பூசிகள் என்ற இமாலய இலக்கை எட்டிப்பிடித்த மோடி அரசு!
இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 195.19 கோடியைக் கடந்தது
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை 7 மணி நிலவரப்படி 195.19 கோடிக்கும் அதிகமான குறிப்பாக இதை 1,95.19,81,150 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,50,56,366 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப் பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி 12-14 வயதிற்குட்பட்டோருக்கான 16 மார்ச் 2022 அன்று தொடங்கப்பட்டது. இதுவரை, ஏறத்தாழ 3.51 கோடிக்கும் அதிகமான இளம் பருவத்தினருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 18-59 வயது உடையவர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 10 ஏப்ரல் 2022 அன்று தொடங்கியது.
இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,995 மிகக் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.11 சதவீதமாக உள்ளனர். இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.68 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,592 பேர். குணமடைந்துள்ளனர். நோய்த் தொற்றின் வேகம் தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,26,57,335. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,084 புதிய நோயாளிகள் பதிவு செய்யப் பட்டுள்ளனர். இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை தற்போது 195. 19 கோடியாக இருப்பது மற்றொரு மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.
Input & Image courtesy: PIB News