கொரோனா தடுப்பூசி வினியோகம்.. மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை.!

கொரோனா தடுப்பூசி வினியோகம்.. மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை.!

Update: 2021-01-09 09:57 GMT

‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்சின்’ தடுப்பூசியையும் அவசரகாலத்துக்கு பயன்படுத்துவதற்கு மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த 3-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த தடுப்பூசிகளை விரைவில் அனுப்பி வைக்கப்படுவதாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தகவல் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 2 முறை ஒத்திகை நடைபெற்றுள்ளது. நேற்று தமிழகத்தில் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து அவரும் விரைவில் தடுப்பூசி அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், தடுப்பூசி குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி, வருகிற 11ம் தேதி (திங்கட்கிழமை) காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதிலிருந்து தற்போது வரை அவ்வப்போது முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News