15 முதல் 18 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முன்பதிவு தொடக்கம்!

கொரோனா பெருந்தொற்று தற்போது ஒமைக்ரான் வைரஸாக மீண்டும் உலகளவில் அச்சுறுத்தி வருகிறது. இதன் பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியது கட்டாயமாக உள்ளது. அதன்படி இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 145 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் போடப்பட்டுள்ளது.

Update: 2022-01-01 08:29 GMT

இந்நிலையில், ஜனவரி 3ம் தேதி முதல் 15 வயது முதல் 18 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி இதற்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளது. கோவின் இணையதளங்களில் ஆதார், பள்ளி, அடையாள அட்டை மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இதனால் கோவின் இணையத்தில் பலர் முன்பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.

Source: Daily Thanthi

Image Courtesy: The Financial Express

Tags:    

Similar News