நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணியானது தொடங்கியது. முதற் கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணியானது தொடங்கியது. முதற் கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கு இலவசமாக மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு முதல் தற்போது வரை தடுப்பூசி போடும் பணியானது மின்னல் வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுவரை 145 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இதனிடையே சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றில் இருந்து உருமாறிய நிலையில் ஒமைக்ரான் வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டது. இது கிடுகிடுவென உலகம் முழுவதும் பரவிவிட்டது. இந்த வைரஸ் இந்தியாவிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்களுக்கு பரவியது. இதனால் மீண்டும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மீண்டும் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அது மட்டுமின்றி குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று கூறினர்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது கொரோனா தொற்றை தடுக்கின்ற நோக்கில் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு ஜனவரி 3ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்றார். அவரது உத்தரவின் பேரில் இன்று நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் சிறார்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். கோவின் இணையதளத்தில் 6.35 லட்சம் சிறார்கள் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Souce, Image Courtesy: Daily Thanthi