கொரோனா தடுப்பூசியில் உலகம் முழுமைக்கும் வழிகாட்டியது இந்தியா! - பிரதமர் மோடி பெருமிதம்!

உத்தரகாண்டில் ரிஷிகேஷ் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து பிரதமர் மோடி பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் 35 புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், நாட்டில் உள்ள பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.;

Update: 2021-10-07 11:30 GMT
கொரோனா தடுப்பூசியில் உலகம் முழுமைக்கும் வழிகாட்டியது இந்தியா! - பிரதமர் மோடி பெருமிதம்!

உத்தரகாண்டில் ரிஷிகேஷ் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து பிரதமர் மோடி பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் 35 புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், நாட்டில் உள்ள பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி: இந்தியாவில் கிடைக்கும் வசதிகள் அதன் திறனை காட்டுகின்றது. ஒரு பரிசோதனை கூடம் என்ற எண்ணிக்கையில் இருந்து 3 ஆயிரம் பரிசோதனை கூடங்கள் என்ற அளவுக்கு நாம் உயர்ந்துள்ளோம். 


மேலும், முக கவசங்கள் மற்றும் உபகரணங்களை இறக்குமதி செய்வதிலும், உற்பத்தி செய்கின்ற நிலைக்கு தற்போது உயர்ந்து நிற்கிறோம். இறக்குமதி நிலையில் இருந்து தற்போது ஏற்றுமதியாளர் என்ற அந்தஸ்துக்கு இந்தியா விரைந்து முன்னேறியுள்ளது என பெருமிதத்துடன் கூறினார்.

மேலும் அவர் பேசும்போது, கோவின் இணையதள நடைமுறை வழியே நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வேலைகள் நடைபெற்று வருகிறது. உலகத்திற்கே கொரோனா தடுப்பூசி செலுத்தும் வழிமுறையை இந்தியா காட்டியதாக பெருமையுடன் கூறினார்.

Source, Image Courtesy: Dailythanthi


Tags:    

Similar News