இந்தியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் - மகிழ்ச்சியளிக்கும் மத்திய மோடி அரசின் அறிவிப்பு!

இந்தியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் - மகிழ்ச்சியளிக்கும் மத்திய மோடி அரசின் அறிவிப்பு!

Update: 2021-01-02 18:30 GMT
நாடு முழுவதும் இருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஸ்தம்பிக்க வைத்த கொரோனா தொற்றிற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஏறத்தாழ அடுத்தடுத்து கைக்கூடி வருகிறது. அமெரிக்க நிறுவனத்தின் பைசர் மற்றும் மாடர்னா, ரஷ்யாவின் ஸ்புட்னிக், சீனாவில் 2 தடுப்பூசிகள் என பல்வேறு தடுப்பூசிகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.

இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மருந்தை, ‘கோவிஷீல்டு’ என்னும் பெயரில் புனேவில் உள்ள சீரன் நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக 95% வீரியத்துடன் அந்த மருந்து பலனளிப்பதாகக் கூறப்படுகிறது.

கோவிஷீல்ட் மருந்தை இந்தியாவில் மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிப்பது தொடர்பாக மத்திய மருத்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் நிபுணர் குழுவும் தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. தற்போது, கோவிஷீல்டு-க்கு அனுமதி வழங்கலாம் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் விரைவில் தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது.

இதனிடையே, மத்திய அரசும் இன்று முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை நடத்தி வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இலவசமாக போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இது நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. விரைவில் கோவிஷீல்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News