கொரோனா தடுப்பூசி.. பிரதமர் மோடி அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை.!

கொரோனா தடுப்பூசி.. பிரதமர் மோடி அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை.!

Update: 2020-12-04 11:58 GMT

கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. அதே போன்று இந்தியாவில் கோவாக்சின், சைக்கோவ் டி மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் உள்ளன.


இந்நிலையில், வீடியோ கான்பரன்ஸில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷவர்தன், அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் முதல்கட்டமாக வெளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படுகிறது.


இதனை யாருக்கெல்லாம் போடுவது, அனைத்து மாநிலங்களிலும் முன்களப்பணியாளர்களுக்கு எப்படி முன்னுரிமை அளிப்பது போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.


மேலும், கொரோனா தடுப்பூசிகளை குளிர்சாதன பெட்டிகளில் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதில் எதிர்கட்சியினரின் கருத்துகளையும் பிரதமர் கேட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News