இந்தியாவில் 76 கோடியை நெருங்கிய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை!
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதே போன்று நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பின்னர் இருந்து தடுப்பூசி போடும் பணியானது வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றைய நிலவரப்படி நேற்று ஒரே நாளில் 54 லட்சத்து 72 ஆயிரத்து 356 தடுப்பூசி டோஸ்கர் போடப்பட்டுள்ளன. அதன்படி இதுவரை 57 கோடியே 41 லட்சத்து 31 ஆயிரத்து 961 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 18 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 370 பேர் இரண்டு டோஸ் போட்டுக்கொண்டனர்.
இதன் காரணமாக நாடு முழுவதும் போடப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 75.81 கோடியை கடந்து 76 கோடியை நெருங்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dailythanthi