நுபுர் ஷர்மா மீதான நீதிமன்றத்தின் கருத்துக்கள் எல்லை மீறியவை - 117 பேர் கொண்ட குழு பரபரப்பு கூட்டறிக்கை
நுபுர் ஷர்மா வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ள கருத்துக்கள் துளியும் சம்பந்தமில்லாதவை என்று 117 பேர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மாவிடம் இந்துக் கடவுள் பற்றி தவறாக பேசும்போது, நபிகள் நாயகம் பற்றிய சில கருத்துக்களை கூறினார். இதற்கு இஸ்லாமியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. சில இடங்களில் வன்முறையும் நடைபெற்றது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் ஷர்மாவின் கருத்துக்க ஆதரவாக கருத்து வெளியிட்ட டைலர் கன்னையா லால் என்பவரை இஸ்லாமிய கும்பல் படுகொலை செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நுபுர் ஷர்மாவுக்கு கண்டனம் தெரிவித்தது. அதாவது ஊடகத்தில் பேசக்கூடிய நபர் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதும், அதன் மூலம் ஏற்பட்ட விளைவுகளும் நாட்டையே தீக்கரையாக்கிவிட்டது. ஒரு கட்சியின் செய்தித்தொடர்பாளராக இருப்பதால் எதையும் பேசிவிட முடியாது. உதய்பூரில் நடைபெற்ற படுகொலைக்கு பொறுப்பற்ற செயலே காரணம். எனவே நாட்டு மக்களிடம் நுபுர் ஷர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து கூறியிருந்தனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிய கருத்துக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 117 பேர் இணைந்து கூட்டாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: நுபுர் ஷர்மா வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ள கருத்துகள் துளியும் சம்மந்தமில்லாதவை ஆகும். எனவே நீதிமன்றத்தின் கருத்துக்கள் நீதித்துறை கண்ணியத்திற்கு எதிரான செயல் ஆகும். இந்த கருத்து நீதிமன்றத்தின் எல்லை மீறிய செயல். நாட்டில் நடைபெறும் கொந்தளிப்புக்கு நுபுர் ஷர்மா மட்டுமே பொறுப்பு என்பது போன்று அமைந்த நீதிபதிகளின் கருத்தில் எவ்வித நியாயமும் இல்லை. தற்போது நீதித்துறையின் இந்த கருத்துகள் அழிக்க முடியாத வடுவாக மாறிவிட்டது. இதற்கு கண்டனம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
Source, Image Courtesy: Vikatan