மகிழ்ச்சியான செய்தி: 2 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி !

2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசின் வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் உபயோகிக்கப்பட்டு வருகிறது.;

Update: 2021-10-12 11:34 GMT
மகிழ்ச்சியான செய்தி: 2 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி !

2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசின் வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் உபயோகிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் கொரோனா தாக்கும் அபாயம் ஏற்பட்டதால் அவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனையை மத்திய எய்ம்ஸ் மருத்துவமனையில் விஞ்ஞானிகள் நடத்தி வந்தனர். அதில வெற்றி கண்டுள்ளனர்.

இந்நிலையில், தடுப்பூசி திட்டத்திற்கான நிபுணர் குழுவினர், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மருந்துகளை ஆய்வு செய்யக்கூடிய ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய சிறந்நு குழுவானது 3 கட்டங்களாக நடத்திய பல்வேறு கட்ட பரிசோதனை அடிப்படையில் கோவாக்சின் தடுப்பூசியை இந்தியாவில் 2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு செலுத்தலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை அவசர கால அனுமதியாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் நாடு முழுவதும் சிறார்களுக்கும் தடுப்பூசி போடும் பணியானது தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Source: Dinakaran

Image Courtesy:Zee News



Tags:    

Similar News