அனைத்து வகை வைரசுக்குமான தடுப்பூசி - இந்திய மருத்துவ குழுவினர் முயற்சி!
அனைத்து வகை வைரஸ்களுக்கு எதிரான தடுப்பூசி இந்திய மருத்துவ நிபுணர்கள் தீவிர நடவடிக்கை.
உலகில் தற்போது கொரோனா வைரஸ் என்பது சாதாரண ஒன்றாகிவிட்டது. குறிப்பாக உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகவும் பிரபலமான ஒரு வார்த்தையாகவே கொரோனா மாறிவிட்டது என்று கூட சொல்லலாம். மனிதன் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டான். குறிப்பாக கொரோனாவிற்கு எதிராக மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு பெரும் சவால்களை கடக்க வேண்டியதாயிற்று. இதன் காரணமாக அடுத்து வரும் தலைமுறையினருக்கு பாதுகாப்பை தரும் பொருட்டு, அனைத்து வைரசுக்குமான தடுப்பூசியை கண்டுபிடிக்க மருத்துவ நிபுணர்களும் முயன்று வருகிறார்கள்.
விடாமல் மனிதர்களை துரத்திக் கொண்டு வரும் கொரோனாவிற்கு எதிராக அடுத்த தலைமுறையினருக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்கள் தடுப்பூசிகளை மருத்துவ நிபுணர் குழு தயாரித்து வருவதாக தேசிய நோய் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் N.K.அரோரா அவர்கள் தெரிவித்துள்ளார். குறிப்பாக தற்போது உள்ள அடுத்தடுத்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை குறைக்கும் விதமாக இந்த தடுப்பூசி அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் எந்த ஒரு வைரஸ்டுகளையும் எதிர்கொள்ளும் சக்தி கொண்ட மருந்துகளை மக்களுக்கு செலுத்துவதை நோக்கமாகக் கொண்டு அதிக வீரியமிக்க தடுப்பூசிகள் தற்போது உருவாகி கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து விதமான வைரஸ்களை எதிர்க்கும் விதமாக இந்த தடுப்பூசி செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இவை விரைவாய் முடிவுகள் தெரிவிக்கப்படும் என்றும் அவர்கள் கூறுகிறார்.
Input & Image courtesy: News