மத்திய அரசின் முடிவை ஏற்ற 90% பல்கலைக்கழகங்கள்: CUET நுழைவு தேர்வு இனி கட்டாயம்!
பல்கலைக்கழக மாநில வழிகாட்டுதலின்படி 90 சதவீத பல்கலைக்கழகங்களில் க்யூட் தேர்வு கொண்டுவரப் பட்டிருக்கிறது.
2022 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதல் நிலை வகுப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் CUET என்ற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த ஆண்டை விட தற்போது 90% குறிப்பாக 26 பல்கலைக்கழகங்கள் CUET நுழைவு தேர்வை கொண்டு வந்து இருக்கிறது என்று பல்கலைக்கழகம் மானிய குழு UGC தகவலை வெளியிட்டு இருக்கிறது. CUET தேர்வு என்பது ஒரு தகுதி தேர்வாக கருதப்படுகிறது குறிப்பாக இளங்கலை அல்லது முதுகலை வகுப்பில் சேர நினைக்கும் மாணவர்கள் கட்டாயம் இந்த தேர்வில் எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை வகுப்பில் சேர்வதற்கு CUET தேர்வு தற்போது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. ஏராளமான பல்கலைக்கழகங்கள் இந்த ஒரு தேர்வு தற்போது ஆதரித்து வருகிறது. இந்தியாவில் சுமார் 26 பல்கலைக்கழகங்கள் இதுவரை இந்த தேர்வு நுழைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 90 சதவீதம் கூடுதல் ஆகும். பல்வேறு பல்கலைக்கழகங்கள் இந்த தேர்வில் நடத்துவதற்கு முன் வந்து இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.
இதில் 44 மத்திய பல்கலைக்கழகங்கள் 33 மாநில பல்கலைக்கழகங்கள் முக்கியமானவை எனக் கூறிய மத்திய குழு இந்த ஆண்டிற்கான விண்ணப்பம் வருகின்ற 30ஆம் தேதி வரை இருப்பதாகவும் மாணவர்கள் உடனடியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் பல பல்கலைக்கழகங்கள் CUET தேர்வில் இணைய கூடும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதற்கான நுழைவு தேர்வு மே மாதம் 21 தேதி முதல் 31ம் தேதிக்கு இடைப்பட்டு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
Input & Image courtesy: Times of India