கண்டிப்பாக குடியுரிமை திருத்த சட்டம் வரும் - மேற்குவங்க கூட்டத்தில் உறுதியளித்த அமித்ஷா

'கொரோனா பரவல் முடிந்தவுடன் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-06 01:45 GMT

'கொரோனா பரவல் முடிந்தவுடன் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாட்கள் பயணமாக மேற்குவங்கம் சென்றுள்ளார், அங்கு உள்ள சிலிகுரியில் நடந்த கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 'திரிணாமுல் காங்கிரஸ் குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து தவறான வதந்திகளை பரப்பி வருகிறது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஊடுருவல் தொடர வேண்டும் என்று விரும்புகிறார் ஆனால் ஊடுருவல் அகதிகளுக்கு மேற்கு வங்கத்தில் குடியுரிமை வழங்கப்பட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். கொரோனா முடிந்தவுடன் நாங்கள் உறுதி அளித்தது போல் குடியுரிமை திருத்த சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும்' என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், 'மேற்கு வங்க மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தாவை முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளார். இனிய மனதில் வைத்து அவர் நன்றாக மக்கள் பணியாற்றுவார்கள் என நினைத்தோம் ஆனால் ஊழல், அராஜகம் பா.ஜ.க தொண்டர்கள் கொலை செய்வது என அவர் எதையும் நிறுத்தவில்லை. இதனை எதிர்த்து பா.ஜ.க போராடாது என அவர் நினைக்க வேண்டாம்' எனவும் எச்சரிக்கை விடுத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.


Source - News 7 Tamil

Similar News