கட்டுமான தொழிலாளர் பெயரில் ஊழல் - கெஜ்ரிவால் அரசின் உண்மை முகத்தை தோலுரிக்கும் பா.ஜ.க

கட்டுமான தொழிலாளர்கள் பெயரில் ஊழல் நடந்து இருப்பதாக டெல்லி அரசு மீது பா.ஜ.க குற்றம் சாட்டி இருக்கிறது.

Update: 2022-11-07 00:35 GMT

புதுடெல்லியில் கட்டுமான தொழிலாளர்கள் பெயரில் மிகப்பெரிய மோசடி செய்து அதில் கிடைத்த 3,000 கோடி கட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக பயன்படுத்தி உள்ளார் என கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ.க புகார் அளித்துள்ளது. புதுடெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மோசடி மன்னன் சுரேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி 50 கோடி ரூபாய் கொடுத்ததாக சமீபத்தில் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது.


இந்நிலையில் பா.ஜ.க செய்தி தொடர்பாளராக பத்ரா, பா.ஜ.க MP மகேஷ் ஆகியோர் ஆம் ஆத்மி அரசின் மீது நேற்று குற்றச்சாட்டை கூறினார்கள். புதுடெல்லி மாநிலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு சார்ந்த ஏராளமான கட்டுமான பணிகள் மேற்கொண்ட வருகிறது. இதில் ஈடுபடும் தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள்.


இந்த வாரியம் 2006- 2021 ஆம் ஆண்டில் 13 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். எப்பொழுது இவர்களுடைய ஆட்சியின் பொழுது 9 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளார்கள். இதில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் போலி தொழிலாளர்கள் அவர்களின் 65 ஆயிரம் பேருக்கு ஒரே மொபைல் எண் கொடுக்கப்பட்டுள்ளது. 15,000 பேருக்கு ஒரே முகவரி தரப்பட்டுள்ளது. இந்த இரண்டு லட்சம் போலி தொழிலாளர்களுக்கு 3000 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News