ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான தில்லி - மும்பை விரைவுச் சாலை - வேற லெவலில் பிரம்மாண்டமான மத்திய அரசின் மாபெரும் திட்டம்!

Update: 2022-07-09 01:12 GMT

ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான தில்லி - மும்பை விரைவுச் சாலையின் 70% பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், இது தேசிய தலைநகர் மற்றும் வர்த்தக தலைநகர் இடையேயான பயண நேரத்தை 12 மணி நேரமாகக் குறைக்கும் என்றும் மத்திய அமைச்சர் கட்கரி தெரிவித்தார்.

ரூ.50,000 கோடி திட்ட மதிப்பீட்டில் மும்பையில் உள்ள நாரிமன் பாயிண்டிலிருந்து தில்லிக்கு கடலோர சாலை மற்றும் வசாய் - விரார் கடல் இணைப்பு கட்டமைப்பு மூலம் தடையற்ற இணைப்பை ஏற்படுத்துவது எனது கனவு" என்றார். இந்தத் திட்டத்திற்குத் தேவையான இரும்பு மற்றும் சிமென்ட் மீதான மாநில ஜிஎஸ்டியை ரத்து செய்யுமாறு மகாராஷ்டிர அரசிடம் மத்திய அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

மும்பை - புனே விரைவுச்சாலை, புனே உள்வட்டச்சாலை ஆகியவற்றின் வெஸ்டர்லி புறவழிச்சாலை வழியாக மும்பையிலிருந்து பெங்களூருக்கு நேரடி சாலை இணைப்பை உருவாக்குவதற்கான திட்டங்களையும் கட்கரி அறிவித்தார். சாலை சீரமைப்பு திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறினார். புதிய புனே - அவுரங்காபாத் சாலை சீரமைப்பு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை வெறும் 2 மணிநேரமாக குறைக்கும் என்றும் தெரிவித்தார்.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம், நிலம் கையகப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு கட்கரி கேட்டுக் கொண்டார். அவரும் நவி மும்பையைப் போல, புனே மற்றும் அவுரங்காபாத் அருகே புதிய சாலைகளில் புதிய நகரங்களை உருவாக்க மகாராஷ்டிர அரசு திட்டமிட வேண்டும் என்று பரிந்துரைத்தார். சூரத் - நாசிக் - அகமதுநகர் - சோலாப்பூரை இணைக்கும் புதிய சாலை சீரமைப்பு வட இந்தியாவில் இருந்து வரும் தெற்குப் போக்குவரத்தில் 50% திசைதிருப்பப்படும் என்றும், இதன் விளைவாக தானே, மும்பை மற்றும் புனேவில் காற்று மாசுபாடு கணிசமாகக் குறையும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

Input From: Business standard 

Similar News