குதுப்மினார் ஒரு சூரிய கோபுரம் - முன்னாள் தொல்லியல் துறை அதிகாரி பரபரப்பு தகவல்!

Update: 2022-05-21 01:52 GMT

டெல்லியிலுள்ள குதுப்மினார் கோபுரம், குத்புதீன் ஐபக் மன்னர் கட்டியது இல்லை. சூரியதிசை அறிய ராஜா விக்ரமாதித்யா கட்டிய சூரியக் கோபுரம் என இந்திய தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரியான தரம்வீர் சர்மா, குதுப்மினார் கோபுரம், டெல்லியின் சுல்தான்களில் ஒருவரான குத்புதீன் ஐபக்கால் கட்டப்பட்டது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அது, 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் விக்ரமாதித்யாவால் கட்டப்பட்டது. சூரியன் இடம் மாறும் திசையை அறிய கட்டியதால் அதன் பெயர் சூரியக் கோபுரம் ஆகும். நான் அங்கு ஆய்வு செய்த போது அதற்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இந்த சூரியக் கோபுரம் செங்குத்தாக இல்லாமல் 25 அங்குலம் அளவில் சாய்ந்திருக்கும். இந்த சாய்வானது சூரியனின் திசையை அறிய அமைக்கப்பட்டது. ஜூன் 21 நாளில் அரை மணி நேரத்திற்கு அதன் நிழல் கீழே விழாது. அறிவியல் ரீதியாகக் கட்டப்பட்ட அந்தக் கோபுரம் ஒரு தொல்பொருள் சான்றாகும். அந்த கோபுரமானது ஒரு தனிக்கட்டிடமே தவிர அருகிலுள்ள மசூதியுடன் அதற்கு எந்த தொடர்பும் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

அதன் நுழைவு வாயிலில் இஸ்லாத்தின் சக்தி எனும் பெயரிலான மசூதி ஒன்று அமைந்துள்ளது. முஸ்லிம்களால் தொழுகை நடத்தப்பட்டுவரும் இந்த மசூதியானது 27 இந்து கோயில்களை இடித்து கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 

Inputs From: Opindia 

Similar News