டெல்லி குடியரசு தின வன்முறை: தேடப்படும் குற்றவாளி சுக்தேவ் சிங் கைது!

டெல்லி குடியரசு தின வன்முறை: தேடப்படும் குற்றவாளி சுக்தேவ் சிங் கைது!

Update: 2021-02-08 16:07 GMT

இந்த குடியரசு தினவிழாவில் தற்போது டெல்லியில் எல்லைகளில் போராட்டம் நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் டிராக்டர் பேரணி என்ற பேரில் கலவரத்தைத் தொடங்கினர். அவர்கள் ட்ராக்டர்களை காவல்துறையை நோக்கிச் செலுத்தினர்.

மேலும் இதனால் பல பொதுச் சொத்துக்கள் சேதமடைந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் செங்கோட்டையை அடைந்து அங்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் காலிஸ்தான் ஆதரவு கொடியை ஏற்றினர். இந்த கலவரத்தில் பலர் காயமடைந்தனர் மற்றும் பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. தற்போது அந்த குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான சுக்ஹதேவ் சிங்கை டெல்லி காவல்துறை சண்டிகரில் வைத்து கைது செய்துள்ளது. 


முன்னர் டெல்லி காவல்துறை, தீப் சிந்து, ஜுக்ராஜ் சிங் மற்றும் குருஜோட் சிங் குறித்து தகவல் தருபவர்களுக்கு 1 லட்ச ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்ததது. மேலும் குடியரசு தின வன்முறையில் கலந்து கொண்ட ஜெய்பிற் சிங், பூட்டா சிங், சுக்ஹதேவ் சிங் மற்றும் இக்பால் சிங் போன்றவர்களைக் கைது செய்ய  உதவுபவர்களுக்கு 50, 000 தருவதாக அறிவித்தது. 

தற்போது கைது செய்யப்பட்டவரைத் தொடர்ந்து குடியரசு தின வன்முறை தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 127 ஆக உள்ளது. முன்னர் காவல்துறை ஹாபீட் சிங், ஹர்ஜீத் சிங், தர்மேந்திர சிங் உள்ளிட்டோரை டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாகக் கைது செய்தது. 

மேலும் மீதமுள்ள குற்றவாளிகளைக் கைது செய்ய CCTV ஆதாரங்கள் மற்றும் மொபைல் ரெகார்டிங் வைத்து டெல்லி காவல்துறை தேடி வருகிறது. 

Similar News