டெல்லி கலவரம்: உமர் காலித் குறித்து என்ன சொல்கிறது குற்றப்பத்திரிகை?

டெல்லி கலவரம்: உமர் காலித் குறித்து என்ன சொல்கிறது குற்றப்பத்திரிகை?

Update: 2020-12-31 16:22 GMT

இந்த ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வன்முறை கிளம்பியது. இது நாடுமுழுவதும் போராட்டங்கள் தொடர காரணமாகவும் இருந்தது. இந்த வன்முறையில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாகப் பல பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

அந்த வன்முறையைத் தூண்டுவதற்காகச் சதித் திட்டம் செய்தற்காக மனித உரிமை ஆர்வலரும் மற்றும் முன்னாள் மாணவ தலைவருமான உமர் காலித் மீது டெல்லி காவல்துறை இன்று குற்றம் சாட்டியுள்ளது. வன்முறையைத் தூண்டுவதற்கு ஜனவரி 8 இல் காலித், காலித் சபி மற்றும் தாஹிர் ஹுசைன் ஆகியோர் கூட்டம் அமைத்து திட்டம் தீட்டியதாக டெல்லி குற்றப் பிரிவு அமைப்பு 100 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது. 

இதே டெல்லியில் டிசம்பர் 2019 மற்றும் மார்ச் 2020 இல் நூற்றுக்கணக்கான உள்ளூர் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் மாநிலத்தில் ஜமீலா மில்லியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீதான காவல்துறை வன்முறைக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

அதே நேரத்தில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் மகாராஷ்டிராவில் நடத்த CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் காலித் பங்கேற்றார் என்று கூறுகின்றனர். அவர் அங்கு ஆத்திரமூட்டும் உரைகளை வழங்கியுள்ளார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பயணத்துக்கான மற்றும் தங்கும் இடங்களுக்கான செலவையும் இவர் ஏற்றுக்கொண்டதாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. 

மேலும் அந்த குற்றப் பத்திரிகையில், வாட்ஸ் ஆப்பில் "டெல்லி ஸ்பாட்டர் எதிர்ப்பு" என்ற குழு அமைத்து அதில் வன்முறைக்கான திட்டத்தைத் தீட்டியதாகக் குற்றம்சாட்டப் பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட குழுவானது ராகுல் ராஜால் உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில், டெல்லி காவல்துறை சிறப்புக் குழு, காலித்கு எதிராக UAPA கீழ் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது. 

Similar News