டெல்லியில் பசுக்கள் தொடர் படுகொலை.. வடிகாலில் வீசப்படும் அவலம்..!

டெல்லியில் பசுக்கள் தொடர் படுகொலை.. வடிகாலில் வீசப்படும் அவலம்..!

Update: 2020-12-08 10:56 GMT
இந்தியாவில் மாடுகள் படுகொலை செய்யப்படுவது நீண்ட காலமாக இருந்துவரும் ஒரு செயலாகும். இதனைத் தடுப்பதற்கு அந்தந்த மாநிலங்களில் பல சட்டங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் இதுபோன்று மாடுகள் படுகொலை செய்யப்படுவது இன்னும் முற்றிலுமாக நிறுத்தப்படவில்லை. அவ்வாறு மாடு படுகொலை செய்யப்பட்ட ஒரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. 

டெல்லியில் துவாரகா பகுதியில் உள்ள ஒரு வடிகாலில் பசுக்கள் கொலை செய்யப்பட்டு அதன் சடலங்கள் இருப்பது தெரியவந்தது. டெல்லியில் பசுக்கள் படுகொலை செய்யப்படுவது ஒரு குற்றச் செயலாகும். 

இந்த குற்றச் சம்பவம் குறித்து டிவிட்டர்க்கு எடுத்துச் சென்ற பா.ஜ.க MP பர்வேஸ் சிங் சாஹிப் இந்த குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளியை விரைவில் கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் பசுக்களில் சடலங்கள் கிடந்த வடிகாலின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதுபோன்று மாடுகள் அறுக்கப்பட்டு மற்றும் அதன் சடலங்கள் வடிகாலில் விட்டுச் செல்வது நீண்ட காலமாக இருந்து வருகின்றது என்பதில் சந்தேகமில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

இந்த சம்பவம் குறித்து அவர் குரல் எழுப்பிய பின்னர், காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தடைந்தனர். மேலும் காவல் ஆணையரிடம் விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்யுமாறும் வலியுறுத்தினார். 

மேலும் இதுபோன்று குற்றச் சம்பவங்களைத் தடுக்க இந்த பகுதிகளில் CCTV கேமராக்களை அதிகரிக்கவும் வலியுறுத்தினார். இந்த வழக்கு தொடர்பாகத் கடந்த திங்கட்கிழமை டெல்லி காவல்துறை அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. 

Similar News