அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார் டென்மார்க் பிரதமர்!

டென்மார்க் பிரதமர் எச்.இ.மெட்டே பிரடெரிக்சின் 3 நாள் அரசுமுறை பயணமாக இன்று (அக்டோபர் 9) அதிகாலை இந்தியா வந்தடைந்தார். அவரை வெளியுறவுத்துறை செயலாளர் மீனாட்சி லேகி வரவேற்றார். தற்போது இந்தியா வந்த டென்மார்க் பிரதமர் வருகின்ற 11ம் தேதி வரை அவர் சுற்றுப்பயணம் செய்வார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Update: 2021-10-09 04:58 GMT

இதனிடையே இந்தியா வந்துள்ள டென்மார்க் பிரதர் மெட்டே பிரடெரிக்சன் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். 

மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்துப் பேசுகின்றார். இந்த சந்திப்பின்போது இரண்டு நாட்டு நட்புறவு மற்றும் தொழில் சம்மந்தமாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்பங்கள், விவசாயம், கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு இருக்கின்றது என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy:ANI

Tags:    

Similar News