டிஜிட்டல் கரன்சி மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கம்: கவனிக்க வேண்டிய விஷயங்கள்?

இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி மூலமாக மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.

Update: 2022-12-13 13:47 GMT

ரூபாய் நோட்டிற்கு இணையாக இணைய வழி பணப்பரிமாற்றம் செய்வதற்காக மத்திய ரிசர்வ் வங்கி அண்மையில் அறிமுகப்படுத்தி உள்ளது தான் டிஜிட்டல் கரன்சி என்ற ஒரு புதிய கரன்ஸி. குறிப்பாக இந்தியாவில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்தியாவில் அனுமதி பெறாத கிரிப்டோ கரன்சிகளின் முதலீடு என்பது சட்டத்திற்கு மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு பெரும் பிரச்சினையாகவே இருந்தது. எனவே கிரிப்டோ கரன்சிக்கு மாற்றாக முதலீட்டாளர்கள் இந்தியாவின் டிஜிட்டல் கரன்சிகளில் முதலீடு செய்ய முடியும் என்றும் வரிவிலக்கு நீங்கள் பெறலாம் என்றும், மத்திய அரசு அறிவித்து இருந்தது. ஆனால் கிரிப்டோ கரன்சிகளின் முதலீட்டில் நீங்கள் கட்டாயம் வரி செலுத்த வேண்டும்.


இந்த டிஜிட்டல் கரன்சி என்பது ஒருவர் இந்த கரன்சியை இணைய வழியில் மற்றொருவருக்கு எளிதாக அனுப்பலாம். ஒருவரிடம் இருந்தும் நாம் பெறவும் முடியும். அதை பயன்படுத்தி கடைகளில் பொருட்கள் வாங்குவது போன்ற வர்த்தக நடவடிக்கைகளிலும் நீங்கள் ஈடுபடலாம். தற்போது கூகுள் பே, போன் பே போன்ற செயல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைக்கும் இந்த டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. குறிப்பாக அந்த பரிவர்த்தனையும் போது ஒருவர் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை இன்னொருவரின் வங்கி கணக்கிற்கு தான் அனுப்ப முடியும் அந்த வகையில் அந்த இரண்டு வங்கிகளுக்கும் இந்த பண பரிமாற்றத்தை இரு வங்கி கணக்கில் வைத்துக் கொள்ளும். ஆனால் இந்த டிஜிட்டல் கரன்சி பொறுத்தவரை பண பரிமாற்றக் கணக்கை ரிசர்வ் வங்கியை நேரடியாக வைத்துக் கொள்கிறது மற்றும் எந்த வங்கி கணக்கிலும் இது வராது.


முக்கியமாக பண பரிமாற்றம் செய்து கொள்ள எப்படி கொடுப்பவர், பெறுபவர் ஆகிய இரண்டு இருவருக்குமே வங்கி கணக்கு தேவை இல்லை. அதை போல் இருவர் பரிமாற்றம் செய்து கொள்பவருக்கும் வங்கி கணக்கு தேவை இல்லை. சி.பி.டி.சி நாணயத்தின் முக்கிய அம்சமாக ரிசர்வ் வங்கி குறிப்பிடுவது பணப்பரிமாற்றத்தின்போது இந்த நாணய பரிமாற்றமும் கொடுப்பவர் மற்றும் பெறுபவரை தவிர வேறு யாருக்கும் வெளியில் தெரியாமல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஆனால் நீங்கள் மிகப்பெரிய தொகையை மற்றொருவருக்கு பரிமாற்றம் செய்யும் பொழுது உங்களுடைய பான் அட்டை எண்ணை குறிப்பிட வேண்டும். அதன் மூலம் வருமான வரித்துறையால் இந்த நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

Input & Image courtesy: Hindu News

Tags:    

Similar News