டிஜிட்டல் கரன்சி விரைவில் அறிமுகமா? - ரிசர்வ் வங்கி கூறியதென்ன?

இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

Update: 2022-10-09 03:13 GMT

குறிப்பிட்ட பயன்பாட்டுகளுக்காக விரைவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்து உள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி நாளும் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நடப்பு நிதி ஆண்டில் டிஜிட்டல் கரன்சி இந்திய ரூபாயில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.


அதன்படி விரைவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. மேலும் அதனுடைய வங்கி அறிக்கையில் இது பற்றி கூறுகையில், குறிப்பிட்ட சில பயன்பாடுகளுக்கான டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படம் அறிமுக செய்யப்படும். இது மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி என்று அழைக்கப்படும் சோதனை முறையில் இந்த கரன்சி அறிமுகம் செய்கின்றோம். தற்போது ரொக்க பணத்திற்கு பதிலாக இதை கொண்டு வர வேண்டும்.


இரண்டு வடிவிலும் கரன்சி நீடிக்கும் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தினை ஊக்குவித்தல், பணம் செலுத்துவதை முக்கிய ஆக்கபூர்வமாக மாற்றுதல், சட்ட விரோதமான பண பரிமாற்றத்தை கட்டுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்கு நோக்கங்களுடன் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. டிஜிட்டல் கரன்சி மொத்த விலை என்றும், டிஜிட்டல் கரன்சி சில்லறை விலை என்றும் இரண்டு வகையான டிஜிட்டல் கரன்சிகள் வெளியிடப்படும். இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வாங்கி அவ்வப்பொழுது தகவல்களை வெளியிடும் என்றும் அது வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News