நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம்: கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு!

இந்துக்களின் மிகவும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படுகிறது.

Update: 2021-11-04 06:44 GMT

இந்துக்களின் மிகவும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்து புதிய ஆடை உடுத்தி பலகாரங்கள், உணவுப் பொருட்களை இறைவனுக்கு படைத்து வணங்கி மகிழ்வர். மேலும், பட்டாசுகளை வெடித்தும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து இந்த பண்டிகையை மிகவும் உற்சாகமுடன் கொண்டாடுவர். மேலும், பெரும்பாலான மக்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடுகளும் நடத்துவர்.


இந்நிலையில், இன்று (நவம்பர் 4) தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே தீபாவளியை பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். அதில் பலர் கோவில்களுக்கு சென்றும் வழிபாடு செய்து வருகின்றனர்.


மேலும், வடமாநிலங்களில் நரகாசுரன் கிருஷ்ணர் வதம் செய்வதை நினைவுபடுத்தும் வகையில், நரகாசுரன் உருவ பொம்மைகளை எரித்து தீபாவளி கொண்டாடி மகிழ்கின்றனர். கோவா மாநில தலைநகர் பனாஜியில் இன்று நரகாசுரன் உருவ பொம்மைகளுக்கு தீ வைத்தனர். இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். இதே போன்று மகாராஷ்டிரா, ஒடிசா, மத்திய பிரதேசம், டெல்லி, குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

Source: Maalaimalar

Image Courtesy: ANI


Tags:    

Similar News