தமிழகத்தில் எத்தனை மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட அனுமதி தெரியுமா?

தமிழகத்தில் எத்தனை மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட அனுமதி தெரியுமா?

Update: 2021-02-02 17:45 GMT

தமிழகத்தில் 195 மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியை போட மத்திய சுகாதாரத்துறை அனுமதியளிக்கப் பட்டுள்ளது. கடந்த 16ம் தேதி முதல் இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளை மக்களுக்கு மத்திய அரசு செலுத்தி வருகிறது. இதற்காக, மாநிலந்தோறும், தேவைக்கேற்ப கொரோனா தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வருகிறது. தமிழகத்தில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என 2 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டன.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அப்பல்லோ, CMS உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளில் இந்தக் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சென்னை, கோவை, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 150க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட தனியார் மருத்துவனைகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதற்கட்டமாக 5 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. 2600க்கு மேற்பட்ட குளிரூட்டப்பட்ட தடுப்பூசி பாதுகாப்பு சேமிப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி 21,000 செவிலியர்கள், முன்கள பணியாளர்களுக்கும் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News