முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அறை யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது தெரியுமா.!
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவருமாக வாஜ்பாய் இருந்தார். அவருக்கு என்று நாடாளுமன்றத்தில் அறை ஒதுக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் 50க்கும் அதிகமான அறைகள் உள்ளன.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவருமாக வாஜ்பாய் இருந்தார். அவருக்கு என்று நாடாளுமன்றத்தில் அறை ஒதுக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் 50க்கும் அதிகமான அறைகள் உள்ளன.
அந்த அறைகளில் மிகவும் பெரியதாக இருந்தது வாஜ்பாய்க்கு ஒதுக்கப்பட்ட அறைதான். முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பின்னர் அத்வானி எம்.பியாக இருந்த போது இந்த அறையை உபயோகப்படுத்தினார்.
வாஜ்பாயின் அறை என்று மிகவும் மரியாதையாக கூறப்பட்ட நிலையில், தற்போது இதனை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி பயன்படுத்திய அறை தற்போது ஜே.பி.நட்டாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.