Church Planting மிஷனரிகளை ஊக்குவிக்கிறதா அமேசான்.?

Church Planting மிஷனரிகளை ஊக்குவிக்கிறதா அமேசான்.?

Update: 2020-12-01 06:30 GMT

சமூக சேவை என்ற போர்வையில் இயங்கும் பெரும்பாலான என்.ஜி.ஓக்கள் மத மாற்றத்தில் ஈடுபடும் மிஷனரிகளாகத் தான் இருக்கின்றன. இவை ஊடுருவாத துறையே இல்லை எனலாம். குழந்தைகள் பாதுகாப்பு, மகளிர் முன்னேற்றம், கல்வி, மனித உரிமைகள் என அனைத்து துறைகளிலும் சமூக சேவை என்ற போர்வையில் மறைமுகமாக கிறிஸ்தவத்தை திணித்து மத மாற்றத்தில் ஈடுபடுகிறார்கள். மருத்துவமனைகளைக் கூட இவர்கள் விட்டு வைப்பதில்லை.

கிறிஸ்தவ மிஷனரி மருத்துவமனைகளுக்குச் செல்பவர்களுக்குத் தான் இப்படி என்று நினைக்க வேண்டாம். அரசு மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் ஏழை நோயாளிகளிடம் நயமாகப் பேசி அவர்களது தேவையை நிறைவேற்றுவது போல் கிறிஸ்தவ நம்பிக்கைகளை புகுத்தி மதமாற்றத்தில் ஈடுபடுகின்றனர்.

முன்னர் வீடுவீடாக வந்து நற்செய்தியை பரப்புகிறோம் என்று நன்கொடையும் பெற்றுவந்த மிஷனரி அமைப்புகள், தற்போது காலத்துக்கேற்ற மாற்றமாய் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் அறிமுகமாகியிருக்கும் விழாக்கால நன்கொடை அளிக்கும் ஆப்ஷனிலும் ஊடுருவி இருக்கின்றன.

இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் முதலிடம் வகிக்கும் அமேசான் பண்டிகை காலத்தில் ஏழை எளியவர்களுக்கு நன்கொடை அளிக்க Gift A Smile என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. இதில் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு மட்டுமே பயன்பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்து அமைப்புகள் நிராகரிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

 

இதில் MID INDIA CHRISTIAN MISSION என்ற அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த அமைப்பு கிறிஸ்தவர்களே இல்லாத இடத்தில் சர்ச் அமைத்து அங்குள்ள மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் Church planting, இந்து மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொலைதூர கிராமங்களுக்கு பாதிரியார்களை மதமாற்றம் செய்ய அனுப்புதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்காக இந்த நிதியை பயன்படுத்துகிறது.

மேலும் டிவி, ரேடியோ, இணையதளம் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், புத்தகங்கள் வாயிலாக மதமாற்றத்தில் ஈடுபடுவதாக தனது இணையதளத்தில் தெரிவித்து உள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு மத்தியப் பிரதேசத்தில் மதமாற்ற வேலைகளில் ஈடுபடுகிறது. 

இந்த அமைப்பு வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி மூலம் ம.பியில் குழந்தைகள் இல்லங்கள், பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களைக் கட்டியுள்ளது. இந்தியக் குழந்தைகளின் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு அதைக் காட்டி வெளிநாட்டு கிறிஸ்தவர்களிடம் நிதியுதவி பெறுகிறது. மக்களை "கர்த்தரிடம்" கொண்டு வருவது தான் தங்களது இவர்க்கு என்று வெளிப்படையாக இணையத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரை 50 சர்ச்சுகளைக் கட்டியுள்ளதாக பறை சாற்றும் இந்த அமைப்பு மேற்கத்திய பாதிரியார்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து மதமாற்றத்தில் ஈடுபடுகிறது. இவர்களிடம் உண்மைக் காரணத்தைக் கூறினால் அனுமதி கிடைக்காது என்று சமூக வலைதளங்களில் மத மாற்றம் குறித்த புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது. 

மிஷனரி விசா வைத்திருப்பவர்கள் மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பது சட்டம். சுற்றுலா விசாவில் வந்திருந்தாலும் இவர்கள் மத மாற்றத்தில் ஈடுபடுவது குற்றமே. இது ஒரு‌புறம் இருக்க அமேசான் Gift A Smile மூலம் இது வரை $ 51 டாலர் நிதியுதவி கிடைத்திருப்பதாக இந்த அமைப்பு இணையத்தில் குறிப்பிட்டுள்ளது. எனவே இந்துக்கள் அமேசானில் பொருட்கள் வாங்கும் போது நன்கொடை அளிக்க விரும்பினால் ஒரு முறைக்கு பல முறை யோசிப்பது நல்லது.

Similar News