இந்தியாவின் ராணுவ ரகசியங்கள் வெளியில் கசிந்ததா.. விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்..
இந்தியாவின் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் ஏஜென்சிக்கு பகிரப்பட்டதா?
இந்தியாவின் ராணுவ ரகசியங்களை வெளியில் சொன்னதாக மூத்த விஞ்ஞானி ஒருவரால் தற்பொழுது பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஏஜென்சிக்கு தகவல்களை பகிர்ந்ததாக மூத்த விஞ்ஞானியை தற்பொழுது மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இந்த ஒரு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம் பூநவில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் என்று அழைக்கப்படும் DRDOவில் மூத்த விஞ்ஞானியாக இருப்பவர் பிரதீப் குருல்கர்.
மேலும் இவர் இந்திய ராணுவ ரகசியங்களை செல்போன் மூலமாக மரண நபரிடம் பகிர்ந்து இருப்பதாக மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அது தொடர்பாக புகார் ஒன்றும் அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது புகார் தொடர்பாக தற்போது போலீசார் தீவிரப்பு விசாரணை நடத்தி வந்தார்கள். அதன் பின்னணியில் விஞ்ஞானி நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தானை சேர்ந்த உளவாளிகளுக்கு தெரிய படுத்தி விட்டதாக தெரியவந்தது.
மேலும் இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறும் பொழுது, "ரகசியங்களை எதிரி நாட்டிற்கு தெரிந்தால் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை தெரிந்தும் விஞ்ஞானி தன்னுடைய பதவியை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். எனவே ராணுவ ரகசியங்களை எதிரி நாட்டிற்கு கொடுத்து இருக்கிறார் என்று கூறப்பட்டு இருக்கிறது. தற்போது இவர் மீது தீவிரமான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வந்து இருக்கிறார்கள். இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் இடமிருந்து இவர் எத்தகைய தகவல்களை பரிமாற்றி இருக்கிறார் என்பது விரைவில் தெரியவரும்" என்று கூறி இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News