ட்ரோன் மூலம் தடுப்பூசி நடவடிக்கை: மத்திய அரசு கையில் எடுக்கும் புதிய முயற்சி!

ட்ரோன் மூலமாக தடுப்பூசி மற்றும் இரத்த சப்ளை செய்வதற்கு புதிய முயற்சி மத்திய அரசு கையில் எடுத்து இருக்கிறது.

Update: 2022-12-25 01:25 GMT

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ட்ரோன் மூலம் தடுப்பூசி, ரத்தம் சப்ளை,, மருந்துகள் சப்ளை செய்யப்படும் என்று விமானத்துறை அமைச்சர் ஜோதி சத்யா கூறியிருக்கிறார். மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதி கூறுகையில், பிரதமரின் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் ஒரே நாடு; ஒரே ஆரோக்கியம் என்ற அடிப்படையில் சுகாதார கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறது.


தற்பொழுது கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் தொலைதூரப் பகுதிகளுக்கு தேவைப்படும் ரத்தம், தடுப்பூசி மற்றும் மருந்துகள் விநியோகத்திற்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன.


ஆனால் இன்று நாட்டில் 22 எய்ட்ஸ் மருத்துவமனைகள் உள்ளன எம்.பி.பி.எஸ் இடங்களில் 90% அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை உலக மற்றும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகமாக மக்கள் தொகைக்கு 220 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் மத்திய அரசின் இந்த ஒரு நடவடிக்கை மூலமாக மருத்துவத் துறையில் விரைவான மாற்றம் ஏற்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News