டெல்லி எல்லையில் காவலரைத் தாக்கி காவல் வாகனத்தை திருடிய போதை 'போராளி' கைது.!

டெல்லி எல்லையில் காவலரைத் தாக்கி காவல் வாகனத்தை திருடிய போதை 'போராளி' கைது.!

Update: 2021-02-17 12:09 GMT

டெல்லி எல்லையில் தற்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. செவ்வாய்க்கிழமை அன்று காவல்துறை வாகனத்தைப் பறித்து மற்றும் SHO வை தாக்கியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் காவலதிகாரிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோசமாக நடந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். 

SHO ஆஷிஷ் துபே கூர்மையான ஆயுதத்தால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். பஞ்சாபைச் சேர்ந்த குற்றவாளி ஹார்ப்ரீத் சிங் காவல்துறை வாகனத்தைப் பறித்துத் தப்பியுள்ளார் மற்றும் SHO ஆஷிஷ் துபே மற்றும் அவரது குழு முஃஅர்ப சவுக் பகுதியில் வைத்து கைது செய்துள்ளது.

மேலும் குற்றவாளி போதையில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிங் கைது செய்யப்பட்டவுடன் அபிஷேக் துபேவை கத்தியால் தாக்கி மீண்டும் தப்பிக்க முயற்சி செய்துள்ளார். நீண்ட நேரப் போராட்டங்களுக்குப் பின்பு சிங் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். குற்றவாளி மீது கொலை முயற்சி மற்றும் வாகன திருட்டு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபிஷேக் துபே அருகிலுள்ள மருத்துவமனையில் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதற்கிடையில் விவசாய அமைப்புகள் தங்கள் கோரிகள் நிறைவேற்று வரையில் போராட்டம் தொடரும் மற்றும் கோடைக்காலத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றது என்று தெரிவித்துள்ளது. மேலும் டெல்லிக்கு வரும் ரயில் பாதைகளையும் அடைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். 

Similar News