ஆஞ்சநேயருக்கு மாலை போட்டு வந்த மாணவன்.. அனுமதிக்கு மறுத்த பள்ளி நிர்வாகம்.. நடந்தது என்ன?

ஆஞ்சநேயருக்கு மாலை போட்டு பள்ளிக்கு வந்த மாணவனை வகுப்பறை வெளியே நிற்க வைத்த பள்ளி நிர்வாகம்.

Update: 2023-04-02 01:55 GMT

தெலுங்கானாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தற்பொழுது ஆஞ்சநேயருக்காக மாலை போட்டு வந்த பள்ளி மாணவன் ஒருவனை வகுப்பறைக்கு செல்ல விடாமல் பள்ளி நிர்வாகம் மறுத்து இருக்கிறது. இந்த ஒரு செயல் காரணமாக பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கை மீது ஆஞ்சநேயர் பக்தர்கள் கோபமாக இருக்கிறார்கள். தெலுங்கானாவில் உள்ள அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள உண்டூரில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவனை செயின்ட் பள்ளி நிர்வாகம் வெளியே நிற்க வைத்து சம்பவம் தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


குறிப்பாக அந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் தான் அபிநவ் என்ற மாணவர். அவர் தற்பொழுது ஆஞ்சநேயருக்காக விரதம் இருந்து மாலை அணிந்து பள்ளிக்கு வந்து இருக்கிறார். குறிப்பாக பள்ளிக்கு வருகை தரும் பொழுது பள்ளி சீருடை அணிந்து வராமல், காவி உடையில் மாலை அணிந்து வந்ததன் காரணமாக பள்ளி நிர்வாகம் அவரை பள்ளிக்குள் அனுமதிக்காமல் மறுத்து இருக்கிறது. இதன் காரணமாக அங்கு ஆஞ்சநேயர் பக்தர்கள் புரிந்து இருக்கிறார்கள். குறிப்பாக பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் இருக்கிறார்கள்.


பள்ளி நிர்வாக முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இருந்தாலும் பின்பு ஒரு குறிப்பிட்ட மாணவர் மட்டும் தங்களுடைய மதத்திற்காக காவி உடை அணிந்து பள்ளிக்கு வந்தால் பிறகு அனைத்து மாணவர்களும் தங்களுடைய மத ஆடைகளை அணிந்து வர ஆரம்பித்து விடுவார்கள் என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இறுதியில் இந்த ஒரு சம்பவத்திற்காக பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டு பிறகு அந்த மாணவரை வகுப்பிற்குள் அனுமதித்து இருக்கிறது.

Input & Image courtesy: Polimer News

Tags:    

Similar News