இ-காமர்ஸ் தளங்களில் உள்ள போலி ரிவியூஸ்: நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!

இ- காமர்ஸ் தளங்களில் போலி ரிவியூஸ் போடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு.

Update: 2022-11-23 07:30 GMT

நுகர்வோர் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு நுகர்வோர் பாதுகாக்கும் சட்டத்தை 2019 ஆம் ஆண்டு மாற்றி அமைத்தது. குறிப்பாக இணையதளத்தில் தற்போது விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. இணைய தள நுகர்வோர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். அந்த வகையில் இகாமர்ஸ் நிறுவனங்கள் இணையதள பயன்பாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறது. இதன் காரணமாக இணையதளத்தில் பதிவேற்றப்படும் போலி விமர்சனங்கள் மற்றும் சரி செய்யப்படாத மதிப்பீடுகளுக்கு எதிரான வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிட மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது.


கொரோனா நோக்கத்துக்கு பிறகு அமேசான், flipkart, facebook, google போன்ற தளங்களில் ஆன்லைன் ஷாப்பிங் பெரிதும் நடைபெற்று வருகிறது. இதனை பயன்படுத்தி பல மோசடி நிறுவனங்கள் கிடுகிடு என முலத்தனம் தரமற்ற பொருட்களை போலியான ரேட்டிங் மற்றும் ரிவ்யூ வழங்கி விற்பனை செய்வதால் மக்கள் பொருட்களை வாங்கி மக்களுக்கு நஷ்டமும் ஏமாற்றமும் ஏற்படுகிறது.


இதனை தடுக்கும் வகையில் புதிதான இ-காமர்ஸ் விதிமுறைகள் வருகின்ற 26 ஆம் தேதி முதல் அமலாகும் என்று நுகர்வோர் உபகாரங்கள் துறை செயலாளர் ரோகித் குமார் சிங் தெரிவித்துள்ளார். எனவே புதிய காமர்ஸ் விதிமுறைகள் வழியாவதற்கு முன்பாக பல்வேறு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதன்படி தான் அவை இனி செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Polimer News

Tags:    

Similar News