'இசஞ்சீவினி' மருத்துவ ஆலோசனை சேவை பெறுவதில் 2வது இடத்தில் தமிழ்நாடு.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்.!

இணையதளம் மூலமாக நோயாளிகள் மருத்துவரிடம் இலவச மருத்துவ ஆலோசனை பெறுகின்ற வகையில் மத்திய அரசால், ‘இ-சஞ்சீவினி டெலிமெடிசின் சேவை’ என்ற சேவை ஆரம்பிக்கப்பட்டது.

Update: 2021-06-11 05:28 GMT

இணையதளம் மூலமாக நோயாளிகள் மருத்துவரிடம் இலவச மருத்துவ ஆலோசனை பெறுகின்ற வகையில் மத்திய அரசால், 'இ-சஞ்சீவினி டெலிமெடிசின் சேவை' என்ற சேவை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சேவையின் மூலமாக எந்த நாட்டில் உள்ள எந்த இடத்தில் இருந்தும் நோயாளிகள் கொரோனா குறித்த தகவல்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்து கொள்ள முடியும். தங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை பெற முடியும் என மத்திய அரசு கூறியிருந்தது.


 



இந்நிலையில், நாடு முழுவதும் இதுவரை 60 லட்சத்து 7 ஆயிரத்து 525 பேர் இசஞ்சீவினி சேவையை பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவலை தெரிவித்துள்ளது. அதிலும் கிராமப்புற பகுதி மக்களும், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கும் இச்சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்தது என மத்திய அரசு கூறியுள்ளது.




 


இதனிடையே இசஞ்சிவினி சேவையை பெறுவதில் ஆந்திர முதல் இடத்தில் உள்ளது. அங்கு 12 லட்சத்து 19 ஆயிரத்து 689 பயனர்கள் ஆலோனை பெற்றுள்ளனர். அதற்கு அடுத்து தமிழகத்தில் 11 லட்சத்து 61 ஆயிரத்து 987 பேர் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளனர் என கூறியுள்ளது.

Similar News