ராமர் கோயில் கட்டுமான பணிகள் - புதிய வரலாற்றை எழுத இருக்கும் அயோத்தி!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு நில நடுக்கத்தை தாங்கும் வகையில் சக்தி வாய்ந்த கற்கள் கொண்டு அமைக்கப்படுகிறது.

Update: 2022-11-10 06:02 GMT

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படும் கற்கள் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் உள்ளதாக கட்டுமான நிறுவனம் தரப்பில் தற்போது கூறப்பட்டு இருக்கிறது. நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி கொண்ட சிக்கப்பள்ளாபூரில் இருந்து அயோத்திக்கு இந்த கற்கள் கொண்டுவரப்பட்ட கிரானைட் கற்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்காக கர்நாடகாவில் இருந்து அயோத்திக்கு கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள சிக்கப் பள்ளாப்பூர் ஒரு மாவட்டத்தில் மேற்கண்ட கற்கள் குவாரிகளில் இருந்து வருகிறது அந்த குவாரிகளில் இருந்து கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு அவற்றுக்கு உலக அளவில் சந்தை மதிப்பில் நல்ல ஒரு மார்க்கெட் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனில் இவை பல்வேறு நிலநடுக்கங்களையும் தாங்கும் சக்தி கொண்ட கற்களாக அறியப்படுகிறது.


இது குறித்து கல்குவாரி ஒப்பந்தக்காரர் முனிராஜ் அவர்கள் கூறுகையில், இங்கு வெட்டி எடுக்கப்படும் கற்கள் நாட்டிலேயே மிகவும் உறுதி வாய்ந்தவை. இந்த கற்கள் நிலநடுக்கத்தையும் தாங்கும் சக்தி படைத்தவையாக இருக்கும். இதனால் பெரும்பாலான முக்கிய கட்டுமான பணிகளில் இங்கிருந்துதான் கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Hindu News

Tags:    

Similar News